திறனாய்வு செய்வது எப்படி என்ற வினாவிற்கு ஏற்ற விடையாய், வருங்காலத் திறனாய்வாளருக்கும் வாசல் திறக்கிறது. ஆய்வுக் கட்டுரை ஆக்கம் என்னும் முன்னுரையாய் அமைந்த முதல் கட்டுரை, திட்டமிடல், செயல்படல், முழுமையாக்கல் எனத் திறனாய்வுக் கட்டுரை எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்பதை விரிவாக விளக்கிச் செல்கிறது.
பொருண்மைச் சிந்தனை என்ற கட்டுரை, எவ்வகைப் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்பதை முன்வைக்கிறது. திருவுந்தியார் என்னும் கட்டுரை, சைவ இலக்கியத்தை -சைவ சித்தாந்தத்தை ஆய்கிறது. நாட்டுப்புறவியலின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற கட்டுரை, நாட்டுப்புறவியலின் தோற்றம், நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள், பாடுபொருள், இலக்கிய வளர்ச்சியில் நாட்டுப்புறவியலின் பங்கு குறித்து விரிவாக ஆய்வு நிகழ்த்துகிறது.
தமிழில் பயண இலக்கியத் தோற்றம், வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசுகிறது. சிவப்பிரகாசர் என்னும் இறுதிக் கட்டுரை, அவர் படைத்தளித்த நால்வர் நான்மணி மாலையின் மாணிக்கவாசகரைப் பாராட்டும் வகையில் அமைந்த 10 பாடல்களைத் திறனாய்கிறது.
– ராமலிங்கம்