மன அமைதிக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் துணையாக அமையும் நுால். எத்தனை முறை படித்தாலும், சலிப்பு ஏற்படுத்தாத, 30 கட்டுரைகள் உள்ளன. தர்மத்தின் அளவுகோல் கருத்தும், கல்வி வளம்தரும் கோவில் விளக்கமும், கீதை உபதேசத்தை ஏன் கிருஷ்ணர் செய்தார் என்பது குறித்து எழுதப்பட்டு உள்ளது. வள்ளலாரின் போதனைகளை பட்டியலிடுகிறது.
காளிதாசனின், ‘சியாமளா தண்டகம்’ தோன்றிய விதமும், நந்தி பற்றிய குறிப்புகளும் விளக்கமாக உள்ளன. குடும்பத்தில் சண்டை போடாமல் இருந்தால் கிடைக்கும் பலனும், தேர்த் திருவிழாவின் நன்மையும் பயனுள்ளதாக இருக்கின்றன.
– டாக்டர் கலியன் சம்பத்து