இந்திய பண்பாட்டின் ஞான ஒளி கோபுரம் என அழைக்கப்படுபவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். மலையாள மூலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து உள்ளார், ப.விமலா.
இந்த பூ உலகில், 39 ஆண்டுகளே வாழ்ந்தார் விவேகானந்தர். அடிப்படை வளர்ச்சிகள் கூட காணாத காலக்கட்டத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து, ஞானம் பெற்றவர்; வெளிநாடுகளிலும் பயணம் செய்து ஞானத்தை பரப்பியுள்ளார்.
அந்த மகத்தான பயணங்களையும், அதன் அடியொற்றிய வாழ்க்கையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த நாவல். விவேகானந்தரை எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது.
எளிய நடையில் நாவலின் ஆன்மா, சிதைவு இன்றி வெளிப்படுகிறது. விவேகானந்தரை மற்றொரு கோணத்தில் புரிந்து, அவரது போதனைகளை கடைப்பிடிக்க உதவும் நுால்.
– வசந்தன்