தமிழரின் மதங்கள் சாம்ராஜ்ஜிய காலங்களில் எப்படி இருந்தது என்பதை விவரிக்கும் நுால். நாயக்கர் காலம், ஆங்கிலேயர் ஆட்சி காலம், நவீன காலம் என பகுப்பாய்வு செய்து, தமிழரின் சமயச் சார்பு பற்றி ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால்.
கிறிஸ்துவ மதம் தமிழர்களிடம் பரப்பப்பட்ட விதம், இஸ்லாமியர் மதம் பரப்ப முனைப்பு காட்டாததற்கான காரணம், நாட்டார் தெய்வ வழிபாடு பற்றிய விபரங்களும் அலசி ஆராயப்பட்டுள்ளன.
ஹிந்து மதத்தில் உள்ள பெரும் பிரிவுகள், அவற்றில் உள்ள வேறுபாடுகள் பற்றி எல்லாம் விளக்குகிறது. தமிழர்களின் மத ஆர்வங்கள் பற்றி அறிந்து கொள்ள உதவும் நுால்.
– ராம்