இந்நுால் 85 கதைகளை உள்ளடக்கியது. மிகவும் சுவாரசியமாக உள்ளன. நல்ல கருவுடன் கூறிய கருத்துகளையும், கதைகளின்முடிவில் நீதியையும் எடுத்துரைக்கின்றன.
கதைகள் கேட்பது, படிப்பது என்பது வெகுவாக குறைந்து வரும் காலத்தில் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ள நுால். பள்ளி மாணவ – மாணவியர் வாசித்தல் பயிற்சியை மேற்கொள்ள உதவும். – வி.விஷ்வா