நாட்டார் இலக்கியம் தொடர்பான 12 கட்டுரைகளைக் கொண்ட நுால். பேரிலக்கிய வடிவத்தைப் பெற்றாலும் மக்களின் கதையாகவே கண்ணகி கதை விளங்குகிறது. சிலப்பதிகாரம் என்னும் தலைப்பே நாட்டுப்புற மக்களை அந்நியப்படுத்தி, இலக்கியத் தகுதியை வழங்குவதாக அமைந்திருப்பதை ஆய்வாளர்கள் உணர்வர்.
கி.பி., 8ம் நுாற்றாண்டில் நம்பூதிரிகள் துளு நாட்டிலிருந்து கேரளத்திற்கு வந்த பின், கண்ணகி வழிபாடு மேனிலையாக்கம் பெற்று, பகவதி வழிபாடு ஆனது என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவம், சோதிடம், இலக்கியம் என பல்வேறு துறை சார்ந்த அகத்தியர்கள் இருந்துள்ளனர் என்பதை, ‘அகத்தியன் தொன்மங்களும் தொடர்ச்சியும்’ என்னும் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். ஆதாரங்களுடன் நாட்டார் இலக்கியத்தை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்