வானொலியில் 20 ஆண்டுகளாக ஆற்றிய உரைகள் எல்லாம் எழுதித் தொகுத்துள்ள நுால். 32- தலைப்புகளில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். ஒரு சிறு கதையும் அடக்கம். நற்செய்திகளை காலைப் பொழுதில் காதில் கேட்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுடன் பயனுள்ள தகவல்களை நுால் வடிவமாக்கியுள்ளார்.
வாரியாரின் சிந்தனைகள், அப்பர் பெருமானின் அருஞ்செயல்கள். திருவள்ளுவரின் குறள்கள், சிறுபஞ்சமூலச் சிந்தனைகள், அவ்வையார் பாடலில் அரிதாக அமைந்தனவற்றை அங்கங்கே குறிப்பிட்டு விளக்கியுள்ளார். தமிழர் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பேண வேண்டும் என்ற கருதுகோளை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது.
மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களை அனுபவப் பிழிவாக விளக்கி இருக்கிறார். வானொலியில் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக உள்ளது. ஆன்மிக சொற்பொழிவாளர்களுக்கு வரப்பிரசாதம்.
– பேராசிரியர் இரா.நாராயணன்