இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது சிந்துவெளி நாகரிக கண்டுபிடிப்பு. அதன் தொன்மையையும், பண்பட்ட வாழ்க்கை முறையையும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த பழமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய நுால் இது.
இந்த நுாலில், ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிந்து எனும் புதிர் என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, வரலாறறின் ரயில்பாதை, முதல் முத்திரை, முதல் பானை ஓடு என கட்டுரைகளில் தலைப்புக்கு ஏற்ப தகவல்கள் ஆதாரப்பூர்வமாக தொகுக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, சிந்துவெளி நாகரிகம் அறிவிப்பும் அதன் பின்னும் என்ற கட்டுரை உள்ளது. எளிய மொழி நடையில், துல்லியமான தகவல்கள் தொகுக்கபட்டுள்ளன. வரலாற்றை அறியும் முயிற்சியின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ள நுால்.
– மலர்