பகுத்தறிவு, தத்துவம், வானியல், கணிதம், இயற்பியல், அறிவியல் அறிவார்ந்தவராகவும் துருக்கி, சமஸ்கிருதம், பாரசீக மற்றும் அரபு போன்ற பல்வேறு மொழிகளில் தேர்ச்சியுடையவராகவும் முகமது பின் துக்ளக் இருந்தார் என்பதை வலியுறுத்தும் நுால்.
உண்மையில் துக்ளக் கோமாளி அல்ல; புத்திக்கூர்மை படைத்தவர் மற்றும் சிந்தனையாளர். பல்வேறு நலம் பயக்கும் தாராள சீர்திருத்தங்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். ஆனால், அனைத்து சீர்திருத்தங்களும் தோல்வியிலேயே முடிந்தன.
முகமது பின் துக்ளக் ஆட்சியில், 93 துறைமுகங்கள் வெளிநாட்டு வர்த்தகக் கேந்திரங்களாகத் திகழ்ந்தன. காலத்தை மீறிய முற்போக்கு கருத்துகள், கொள்கைகள், திட்டங்கள், சமகாலத்தவரால் ஏற்கப்படவில்லை. முகமது பின் துக்ளக்கின் நிர்வாகத் திறமை நோக்கங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்ற நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்