ஹிந்து மதத்தின் சிறப்பே அவரவருக்கு பிடித்த மாதிரி வழிபடலாம் என் பது தான், ஆன்மிகத்தில் ஈடுபடலாம். இந்த பரந்த கொள்கை இறைவழி பாட்டை மட்டும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருக்கிறது. வழிபாட்டுக் கும் விரதத்துக்கும் உள்ள வித்தியாசம், பலன்களை விவரிப்பது அழகு. கோவிலுக்குச் சென்று வேண்டு வது வழிபாடு.
பரிகார தலங்களை தேடிச் சென்று நம் குறைகளை சொல்வதற்கு பதிலாக, வீட்டில் விரதமிருந்து அதே தெய்வத்தின் அருளை வீட்டிலேயே பெறுவது விரதத்தின் மகிமை என்கிறார் ஆசிரியர் பிரபுசங்கர்.
ஒவ்வொரு விரதத்தின் சிறப்பு, அதற்கான வழிபாடு, அது தொடர்பான புராணக்கதைகள், விரதத்தின் பலன் என முழுமையான தொகுப்பான இப்புத்தகத்தை உருவாக்கியுள்ளார். இளைஞர்கள் விழாக்கள் கொண்டாடும் போது பக்தி மார்க்கத்துடன் விரதங்களின் பலன்களையும் தெரிந்து கொண்டு கடைப்பி டித்தால் அவற்றின் பலன் இருமடங்காகும்.
– எம்.எம்.ஜெ.,