வேதத்தின் பல பகுதிகளில் இறுதியில் ஒரு உபநிஷத் இருக்கும். யஜுர் வேதத்தின் காடகசாகையில், கடோபநிஷத்தும் ஒன்று. இந்த உபநிஷத்திற்கு வட மொழியில் ஆதிசங்கரர் முதல் பலர் உரை எழுதியிருப்பனும், தமிழில் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் வெளிவந்துள்ள நுால்.
பயன்படுத்தும் சொற்கள் மிகக் கவனமாக முக்கியமாகக் கோபத்திலும் கொடியதாக இல்லாமல், பேச வேண்டும் என்பதை கூறுகிறது. அக்னி வித்தை குறித்தும், மோட்ஷம் அடையும் வழி குறித்தும் எளிய நடையில் விளக்குவது மிக அருமை.
நுாலைப் படிப்போர்க்கு, மேலும் தெளிவு கிடைக்க, திருக்குறள், ஸ்ரீமத் பகவத் கீதை, திருமந்திரம் மற்றும் ராமாயண நிகழ்ச்சிகளை ஒப்பிடுவது உரையாசிரியரின் நுண்ணிய அறிவுத் திறனை உணர்த்துகிறது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து