தமிழில் கடித இலக்கியங்கள் என்னும் வகைமையில் உள்ள நுால். யாருக்கோ எழுதிய கடிதங்கள் அல்லாமல் எழுத நினைத்த கடிதங்களின் இலக்கிய வடிவம். காசையும் பணத்தையும் எழுதி வைப்பது மட்டுமல்ல, கனவுகளையும் லட்சியங்களையும் எழுதி வைப்பதும் உயில் தான் என புது விளக்கத்துடன் மகன்களுக்கு எழுதும் கடிதம் துவங்குகிறது.
அறிவுரைக் களஞ்சியமாக இருக்கும் என்னும் எதிர்பார்ப்புக்கு அப்பால் உண்மை விளக்கமாக அமைந்துள்ளது. மகன்களுக்கு, கல்லுாரி நண்பர்களுக்கு, விடுதி நண்பர்களுக்கு, மாணவச் செல்வங்களுக்கு, பெற்றெடுக்காத பிள்ளைகளுக்கு, பெற்றோருக்கு, மாண்புமிகு ஆசிரியருக்கு எனத் தனித்தனியாக அமைந்துள்ளன.
வேண்டாதவற்றை நீக்குவதால் சிற்பிகள், வேண்டியதைச் சேர்ப்பதால் ஓவியர்கள் என்று ஆசிரியர்களைத் துல்லியமாகக் கணித்துள்ளார். எண்ணங்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளது இந்தக் கடிதங்கள்.
– முகிலை ராசபாண்டியன்