பெண்களை மையமாக்கி தர்க்கப்பூர்வமாக உரிமைகளை பற்றி பேசி அலசும் சமூக சீர்திருத்த நாவல். பின்தங்கியுள்ள பெண்களின் உரிமையை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. தேவதாசி முறை, பொட்டுக்கட்டுதல், விதவை, பரத்தையர் என பல நிலைகளிலும் பின் தள்ளப்பட்ட பெண்கள் பற்றி பேசும் நுால். பெண்கள் பின்னடைந்துள்ள நிலையை கதா பாத்திரிங்கள் வழி தர்க்கப்பூர்வமாக அலசி, தீர்வுகளை காண முயற்சி செய்கிறது.
பாத்திரங்களும், அவற்றின் உரயைாடல்களும் மிகவும் நுட்பமாக உள்ளன. உரையாடல் சாரம்சம், பெண்களுக்கு எதிரான சமூகத்தின் நிலையை சாடும் வகையில் அமைந்துள்ளது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வரும் பெண்ணினத்துக்கு ஆதரவான கருத்துகளை, நாவல் வடிவில் தருகிறது.
பிரபல கவிஞர் ஒருவரின் பெண் உரிமை தொடர்பான நிலைப்பாடு பற்றிய கருத்தையும், மிக நுட்பமாக, மனம் கோணாமல் பதிவு செய்துள்ளது. பெண்கள் முன்னேற்றம் தொடர்பான கருத்தை ஆதரிக்கும் நாவல்.
– மலர்