உலக நலன், சமூக நலன், தனிமனிதச் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள நுால். நபிகளின் கருத்துகளை மையமாகக் கொண்டது. உலகை நன்னெறிக்கண் செலுத்த வேண்டும் என்ற பண்பட்ட உள்ளத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் காணமுடிகிறது. மனித வளமேம்பாட்டுக்குரிய செய்திகளைத் தருகிறது.
மனிதர்கள் இறைநெறி நின்று, அறநெறி காத்து, வாழ்வியலைச் செந்நெறிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு குரான் சொல்லியுள்ள கோட்பாடுகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது.
நவீன அறிவியலோடு திருமறை வழி நின்று கருத்துகளை விளக்குகிறது. ஐம்பூதங்களின் இயல்புகளைப் பற்றிய முதல் நான்கு கட்டுரைகளும் இயற்கைப் பாதுகாப்பை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சுற்றுப்புறச்சூழலுக்கான பங்கின் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
அரசியலும் மதநல்லிணக்கமும், உயிர் உருகும் சத்தம், கருப்பில் விரியும் நிற அரசியல் போன்றவை கவனிக்க வேண்டிய கட்டுரைகள்.
– ராம.குருநாதன்