சைவச் சிந்தனைகள் பலவற்றைக் குறிப்பதுடன் சமயச் சமத்துவத்தையும் பொருளாதாரச் சமத்துவத்தையும் சாதிச் சமத்துவத்தையும் உணர்த்தும் நுால் கம்பராமாயணம்.
கதையில் பொதுமைத் தன்மைகள் இல்லாமல் இருந்தாலும் கம்பனின் கருத்தில் இந்தப் பொதுமைத் தன்மையைக் காணமுடியும்.
கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்கள் பற்றி அறிஞர்கள் கட்டுரைகளைப் படைத்துள்ளனர். தசரதன் குடும்ப உறுப்பினர்கள், வாலி குடும்ப உறுப்பினர்கள், ராவணன் குடும்ப உறுப்பினர்கள் என மூன்று பெரும்பிரிவாக வெளியிட்டுள்ளனர். கதை மாந்தர்களை இப்படிப் பகுத்துப் பார்க்க இயலும் என்னும் புது நோக்கை இந்தப் பதிப்பு முறை எடுத்துக்காட்டுகிறது. கம்பனின் காவியச் சிறப்பை வெளிப்படுத்தும் வைரக்கல்.
– முகிலை ராசபாண்டியன்