குருக்ஷேத்ரம் என்றதும் மனக்கண் முன் வருவது நீதிக்கும், அநீதிக்கும் இடையேயான ஒரு போர்; அடுத்தது பலனை எதிர்பார்க்காதே; கடமையைச் செய் என்ற கண்ணனின் அறிவுரை. இந்த நுாலில் மகாபாரதத்தின் சாரத்தை, அதில் கூறப்பட்டுள்ள வரலாற்றுக் கதைகளை, குருக்ஷேத்ரம் தொடர்பான தகவல்களை எளிய நடையில் புரிந்து கொள்ளும் வகையில் தாராளமாக வழங்கி இருக்கிறார்.
நுாலைப் படித்ததும் குருக்ஷேத்ரத்திற்குச் செல்ல வேண்டும்; புனிதர்கள் பலர் ஒன்று கூடிய அந்த தலத்தை தரிசிக்க வேண்டும்; புண்ணிய ஆத்மாக்கள் உலாவிய இடங்களில், அவர்களின் பாதம் பட்ட இடங்களில் சஞ்சரிக்க வேண்டும். அவர்களின் மூச்சுக் காற்று பரவி இருக்கும் இடங்களுக்குச் சென்று நாமும் அதை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும். இது, வெறுமனே ஒரு பயணக் கட்டுரை அல்ல; வாழ்வுக்கு பயனுள்ள ஒரு கட்டுரைத் தொகுப்பு.
– இளங்கோவன்