பகவான் கண்ணனின் அருள் நிறைந்த வரலாறு பாகவதம். உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சியை, திருமாலின் அவதாரமாகக் காட்டுகிறது. விஷ்ணுவின் 20க்கும் மேற்பட்ட அவதாரங்களையும், அவதார தத்துவங்களையும், உபதேசங்களையும் சொல்கிறது.
கபில அவதாரம் உபதேசிக்கும் சாங்கிய யோகம், எந்த தத்துவமும் சொல்லாத புதுமையானது. கண்ணனைச் சரண் புகுந்தால் மன நிறைவும், குடும்ப வளமும், சமுதாய நலமும் பெறலாம் என்கிறது பாகவதம்.
பத்து ஸ்கந்தங்களாக பிரிக்கப்பட்டு, 119 தலைப்புகளில் சுவையான கிருஷ்ண லீலைகள் பேசப்படுகின்றன. விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களுடன், கவுமார, நாரத, ஹயகிரீவர், ரிஷபர், கபில, தத்தாரேய, புத்த அவதாரங்கள் முடித்து கல்கி அவதாரம் எடுக்க உள்ளார்.
மகாபாரதக் கதை முழுதும் கண்ணன் மகிமையை உணர்த்துவதாக இதில் கூறப்பட்டுள்ளது. பகவான் கண்ணன் மேல் பக்தியை வளர்க்கும் உன்னத நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்