தமிழில் இணைமொழிகளைத் தேர்ந்தெடுத்து புதிராக வழங்கியுள்ளார். இணைமொழிகளைக் கண்டுபடிப்பதற்கு வசதியாக வட்டத்திற்குள் எழுத்துகளைக் கொடுத்து, கலைந்துகிடப்பவற்றை வரிசையாக்கினால் இணைமொழி வரும் வகையில் தந்துள்ளார்.
இணைமொழி உணர்த்தும் பொருள் யாது என்பதையும் கொடுத்துள்ளார். அற்ப சொற்பம் என்னும் இணைமொழிக்கு விளக்கமாக மிகக் கொஞ்சம் எனப் பொருள் வழங்கியுள்ளார். இணைமொழிப் புதிருக்கான விடைகளையும் புத்தகத்தின் நிறைவுப் பகுதியில் எண்ணிட்டு வழங்கியுள்ளார். வினாடி வினா நிகழ்ச்சி நடத்துவோர் புதிர்ச் சுற்று என ஒரு சுற்றினை வடிவமைத்துக்கொண்டால் அதற்கு இந்த இணைமொழிப் புதிர் பயன்படும்.
– முகிலை ராசபாண்டியன்