பெண்மையை போற்றச் செய்யும், 23 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலும் ஆணாதிக்கம், கொரோனா ஆதிக்கம் என்ன சின்ன சின்ன கருத்துள்ள கதைகள். உயிர்க்காற்று என்ற ஆக்சிஜன் தேவையை முதல் கதையில் சொல்லுகின்ற ஆசிரியர், 60 வயதிலும் தேவைக்காக ஆளுமை குணம் காட்ட விரும்பிய கணவனை விட்டு ஒதுங்கி, வயிற்றை கழுவுவதற்காக, வீட்டு வேலைக்காரியாக வந்த பூங்காவனத்தின் குணச்சித்திரம் படிப்பவர் மனதில் உயர்ந்து நிற்கிறது.
இந்தக் காலத்திலும் பத்து வயசுக்கு மேல் பெண்ணைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம், அரசியல் விளையாட்டுகள் என்று கதைகளின் மைய புள்ளிகள் அமைந்திருக்கின்றன.
– சீத்தலைச் சாத்தன்