கவிஞர், புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர், ஓவியர், இசைக்கலைஞர், பன்மொழிப் புலமை கொண்டவர், பல தொழில் செய்தவர். பன்முக ஆளுமைக் கொண்ட தஞ்சை ப்ரகாஷ் என்ற ஆளுமையை ஏழு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தி நுாலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சொந்த வாழ்விலும் இலக்கியப் படைப்பிலும் சோதனை முறையைப் பின்பற்றுவதையே தன் நெறிமுறையாகக் கொண்டவர். பாலம், குயுக்தம், என்று தொடர்ந்து பல்வேறு இதழ் நடத்தும் முயற்சிகளிலும், கதை சொல்லிகள், சும்மா இலக்கியக் கும்பல் முதலிய இலக்கிய அமைப்புக்களை நடத்தும் செயல்பாடுகளிலும் எழுத்தாளர்களை தேடி அடைந்து உரையாடுவதிலும் காலத்தையும் பொருளையும் செலவழித்து ஓய்ந்தவர்.
அவரது எழுத்துகள் புதிய இளைஞர்களால் பெரிய அளவில் விரும்பி வாசிக்கப்படுகின்றன என்ற உண்மை, எழுத்தின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்