குடும்ப சூழலில், இலக்கிய நெறியுடன் வாழும் மனிதருக்கும், அவரை சூழ்ச்சியால் வீழ்த்த நினைக்கும் தீயவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே, இந்த நாவலின் கதைக்களம்.
போராட்டத்தில் இறுதியில், நன்மையே வெற்றி பெறும் என தீர்ப்பளிக்கிறது. அனைத்து மனிதர்களுக்காகவும் எப்போதும் கதவைத் திறந்து வைத்திருக்கும் இயற்கையை, ஒரு சிலர் சுயநலத்துடன் சூறையாடுவதை வலியுடன் விவரிக்கிறது. தப்புவிப்பான், கதையின் நாயகனாக வருகிறார்.
நீதி நேர்மையை காற்றில் பறக்கவிட்டு, தவறான வழியில் சேர்க்கும் செல்வம், சில காலத்தில் நல்ல படிப்பினையையும் கற்று கொடுக்கும் என, கதாபாத்திரம் வழியாக புரிய வைக்கிறது.
காவல் நிலையத்தில் நடக்கும் விசாரணை முடிவுகள், அதனால் ஏற்படும் விளைவுகளை, கதை களத்துடன் பொருத்தியது, நடப்பு சம்பவங்களில் வெளிப்பாடாக உள்ளது. பாட்டுடன் கதையை பொருத்திய விதம், வாசிப்பை சுவாரசியப்படுத்தியது. குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நுால்.
– ராயன்