வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினர் விட்டொழிக்க வேண்டிய தீய குணங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை வலியுறுத்தும் வகையில், சிறு கதைகளாக எழுதிய கருத்தாழம் மிக்க 50 கதைகளின் தொகுப்பு நுால்.
வறுமையிலும் செம்மை தவறாமல் வாழும் வழிமுறையை, ‘யோகக்காரன்’ என்ற கதையும், அவசரத்தால் எதிர்கொள்ளும் இழப்புகளை, ‘பொறுமை’ என்ற கதையும், எத்தகைய நண்பர்களுடன் பழக வேண்டும் என்பதை, ‘கூடா நட்பு’ என்ற சிறுகதையும் சொல்கின்றன.
பெரும்பாலான கதைகளில் அறப்பண்புகளே அதிகம் மிளிர்கின்றன. கதைகளில் ஆங்காங்கே நகைச்சுவை உணர்வும் இழையோடுகிறது. தேனில் குழைத்த மருந்து போல, சங்க இலக்கியம், தற்கால இலக்கியங்களின் பாடல் வரிகளை பயன்படுத்தி இருப்பது சிறப்பு. சிறுவர் இலக்கிய வகைக்கு நல்ல வரவு. காலத்தின் தேவைக்கேற்ற நல்ல நுால்.
– ராமலிங்கம்