தொழில் வளர்ச்சி நோக்கிய சிந்தனையில் எழுதப்பட்டுள்ள நுால். வளர்ச்சியில் புதிய உச்சங்களைத் தொட்டு புரட்சி செய்துள்ள நிறுவனங்களின் அனுபவக்கதைகளையும் உள்ளடக்கியது. புத்தகத்தில், 16 கட்டுரைகள் உள்ளன. உலக அளவில் நடந்த தொழில் புரட்சிகளை சுருக்கமாக முதல் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. மாற்றத்தை ஏற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அடுத்து வர உள்ள தொழில் நுட்ப புரட்சிகள் சார்ந்து நம்பிக்கையூட்டும் விதமாக வரையப்பட்டுள்ளது. தொடர்ந்து பல தொழில் புரட்சி மாதிரிகள் நம்பிக்கையூட்டும் விதமாக தொகுக்கப்பட்டுள்ளன. தொழில்துறையில் முன்னேற விரும்புவோருக்கு உத்வேகம் தரும்.
– ஒளி