ஒன்றே முக்கால் அடியில் உலகினர் ஒப்புக்கொண்டு கடைப்பிடிக்கத்தக்க அரிய தத்துவங்களை அழகு தமிழில் எடுத்தியம்பும் திருக்குறளுக்கு ஒப்புதலான நுால். ‘வானமளந்த தனைத்து மளந்திடும் வன்மொழி வாழியவே என, தமிழ்மொழியை அமரகவி பாரதி புகழ்ந்தேத்த முக்கியக் காரணமான நுால்களுள் முன்னணியில் இருப்பது திருக்குறள். திரு என்னும் அடைமொழி ஒவ்வொரு குறளையும் சிறப்பித்து நிற்கிறது.
திருவள்ளுவரின் சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகளைக் கொண்டு 34 தலைப்புகளில் எளிமையும் வளமையுமாக அமைத்துள்ளார். ‘காமம் அல்லது காதல் என்ற வினோத உணர்வு உடல் சார்ந்ததாக மட்டும் அல்லாமல் மனமும், மரபும் மற்றும் உறவும், நாகரிகக் கலாசாரமும் சார்ந்ததாக இருக்கிறது’ என வர்ணிக்கிறது இந்த நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்