உழவர் பெருமக்களை நாயக – நாயகியராகக் கொண்டு எழுந்தப்பட்ட நுால், சொல் வளமும், பொருள் வளமும் இழைந்தோடி, இனிமை பாய்கிறது. முதல் பதிப்பைக் கொண்டு, அவற்றில் கூறப்படாத செய்திகளை தொகுத்து விரிவான பொருளுரையும் பதவுரையும் எழுதப்பட்டுள்ளது.
பாடலின் தலைப்புக்கான முகவுரை, இசைமரபு, தாள வகையை குறிப்பிட்டுள்ளார். சொற்கட்டும், சந்தங்களும் நிறைந்த பாடல்களைக் கொண்டது. சில பாடல்கள் இசை நயத்திற்காக, ஆரம்பப்பள்ளியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
மழைக்குறி பற்றிய பாடல், ‘ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே...’ என இதயத்தை வருடும். அத்தகைய பாடல்களுக்கு பொருள், இசை நயத்தோடு பாட பேதங்களையும் பதிவு செய்துள்ளார். மீண்டும் படிக்கத் துாண்டுவதாக அமைந்துள்ளது.
– புலவர் சு.மதியழகன்