வீடு வீடாக செய்தித்தாள் போட்ட சிறுவன், பின்னாளில் செய்யும் சாதனையால் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக ஆகிறான். ஒரு நம்பிக்கை நாயகனின் வரலாறு இது. ஒரு விழாவில் அப்துல் கலாம், ‘இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நான், கிறிஸ்துவ வழிபாட்டுக்குரிய மெழுகுவர்த்தி வாயிலாக, ஹிந்து வழிபாட்டுக்குரிய குத்துவிளக்கை ஏற்றுகிறேன். மதவெறி அற்று வாழ வேண்டும்...’ என அறிவுரைத்தார்.
டேராடூனில் வேலை வாய்ப்பு கிடைக்காத அப்துல் கலாம், 28 ஆண்டுகளுக்குப் பின், அங்கேயே பெரும் பாராட்டு பெற்றது உழைப்புக்கு கிடைத்த மரியாதை. மாணவர்கள் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்று பாடுபட்டவர் கலாம். கிராமம் வளர்ச்சி பெற வேண்டுமானால், அஞ்சல் துறை புதிய பணிகளில் மிளிர வேண்டும் என்றவர். அவரை பற்றி எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்