காட்டில் பலரை கொன்று தின்ற சிறுத்தையை வேட்டையாடிய அனுபவத்தை மர்மக்கதை போல் விறுவிறுப்புடன் விவரிக்கும் நுால். எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தை, 20 இயல்களாக்கி, தெளிவான படங்களுடன் தரப்பட்டுள்ளது. திகில் கதை வாசிப்பது போல் உள்ளது.
காட்டில் சிறுத்தை மற்றும் விலங்குகள் நடத்தையை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, குழப்பமின்றி தெரிவிக்கிறது. வீடு புகுந்து கொல்லும் சிறுத்தையால் மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
காட்டில் வாழும் எளிய மனிதர்களின் கனிவு, நம்பிக்கையை பெருமையுடன் எடுத்தியம்புகிறது. சம்பவங்கள் நேரில் காண்பது போல் காட்சி மயமாக உள்ளது. சிறுவர், சிறுமியருக்கு பரிசளிக்க உகந்த நுால்.
– ராம்