பதின்ம வயதைப் பக்குவமாய்க் கையாள வேண்டும். முட்டையைப் போலச் சில நேரங்களில் சட்டென உடைந்து விடும், உடைக்கவே முடியாத பாறை போலச் சிலநேரம் மாறிவிடும் புதிர்களின் புகலிடமான மனித மனங்கள்.
தன்னம்பிக்கை பெரியவர்களுக்கான விஷயம் எனப் பல வேளைகளில் ஒதுக்கி வைப்பதுண்டு. உண்மையில் தன்னம்பிக்கை பதின்ம வயதினருக்கே மிகவும் தேவை, என்பது போன்ற தத்துவார்த்த கருத்துகளை 27 தலைப்பின் கீழ்ப் பதிவு செய்துள்ளார்.
உங்களின் உணர்ச்சி, எண்ணங்கள், பிரச்னைகள் எல்லாமே யாரோ ஒருவருடன் சம்பந்தப்பட்டவை என்பது தவறு. யாருடனும் சம்பந்தப் பட்டதில்லை என்றும் உரைக்கிறது. இந்த நுால் உங்கள் எண்ணம், உணர்ச்சி, முட்டாள்தனம் போன்றவற்றிற்கு உங்களைத் தவிர வேறு எவரோடும் தொடர்பில்லை என்கிறது.
சமூகத்தில் உள்ள ஆண் பெண் வேறுபாடுகள், பாலியல் இச்சைகள், அந்தரங்கம், போதனைகள் போன்ற சிக்கல்களை பதிவு செய்துள்ளது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்