நளவெண்பாவின் நயத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து இன்புற வேண்டும் என்னும் பேரவாவால், பாமரரும் அறிந்துகொள்ளும் வகையில், மிக எளிய நடையில் தெளிவுரை அமைப்பினைச் செய்து, இடையிடையே புராணக் குறிப்புகளுக்கு விளக்க உரை எழுதியும், அருஞ்சொற்களுக்குப் பொருளுரை எழுதியும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
நளவெண்பாவை நவில்தொறும், தமிழ் நயத்தோடு மன அமைதியும் தருகிறது. தமிழ்ப் பயிற்சிக்கு ஒரு தெளிந்த ஊற்றுக்கால் போன்றது. கவிஞராக விரும்புவோர், இந்நுாலை மனப்பாடம் செய்து விட்டாலே போதும். கவிதை ஊற்றெடுத்து பொங்கி வருவதை உணர்வர்.
– புலவர் சு.மதியழகன்