உயிர்த்திருப்பது எல்லாம் வாழ்க்கை அல்ல; உள்ளத்தில் தெளிவும், பரிவும், நிம்மதியும் நிறைந்திருப்பது தான் வாழ்க்கை. அப்படிப்பட்ட வாழ்க்கையை சுய கட்டுப்பாடும், விசால பார்வையும், தகாதவற்றை நாடாதிருக்கும் பிடிவாதமும் சாத்தியமாக்கும் என, இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம், 33 தலைப்புகள். பொய்யை வெறுக்கும் எறும்புகள்; மன்னிப்பு மகோன்னதமானது. அதற்கு கிடைக்கும் பரிசுகள் அலாதியானது; இரவல் பொருட்கள் ஒருவரின் நேர்மைக்கான பரிசோதனை. அதில் நீதியை நிலைநாட்ட வேண்டும்; அண்டை வீட்டாரின் அன்பைப் பெறுவதே மனிதத்தின் உன்னதம் என, சிறு கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அறிஞரான மவுலவி நுாஹ் மஹ்ழரி, நபிகளாரின் செயல்பாடு மற்றும் அறிவுரை, திருக்குரானின் வழிகாட்டுதல் வழியே, வாழ்க்கையை செம்மைப்படுத்தும் விஷயங்களை கூறியுள்ளார்.
– பெருந்துறையான்