தமிழகத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள வைணவத் தலங்களைப் பற்றிக் குறிப்பிடும் நுால். 20 வைணவத் தலங்களைத் தேர்ந்து கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தலத்திற்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து தகவல் தருகிறது. கோவில் வரலாறு, அமைவிடம், செல்லும் வழி, தெய்வங்களின் பெயர், வழிபடும் முறை, பக்தர்களுக்குக் கிடைக்கும் நற்பலன்கள் தரப்பட்டுள்ளன.
ஸ்ரீலட்சுமி நரசிம்மஸ்வாமி திருக்கோவில், பச்சை வாரணப் பெருமாள் திருக்கோவில், சதுர்புஜ கோதண்டராம திருக்கோவில், ஸ்ரீயோகராமர் திருக்கோவில். ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில், திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில், ஸ்ரீசீதாதேவி சமேத ஸ்ரீகோதண்டராமஸ்வாமி திருக்கோவில் போன்ற தலைப்புகள் பக்திச் சுவை தருவதோடு, படித்தவுடன் நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிறது.
ஆஸ்திகப் பெருமக்கள் படிக்க வேண்டிய நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்