கவலையை விரட்ட உதவும் தத்துவ சிந்தனைகள் நிறைந்த நுால். சின்னஞ்சிறு கட்டுரைகள் மூலம் ஒவ்வொரு மனிதனின் நடப்பிலும் நினைப்பிலும் தோன்றும் கருத்துக்களை கேள்விகள் ஆக்கி, தக்க உதாரணங்களுடன் பதில் தரப்பட்டுள்ளது.
மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் அதிலிருந்து விடுபடுவது, நேசித்தவர் இறந்த பின் ஏற்படும் மனச்சோர்வை களைவது, தற்கொலை எண்ணங்களை தடுப்பது போன்றவற்றுக்கு தக்க விடை தரப்பட்டுள்ளது.
இளம் வயது காதல் தரும் ஏமாற்றம், அதன் பின்விளைவுகள், அதை உணர்ச்சி வேகத்தில் மோக வெறியில் கையாளக் கூடாது என்பதற்கான காரணங்கள் தரப்பட்டுள்ளன. நமக்காகவே எழுதப்பட்டது போல் தோன்றுகிறது. ஆழ்ந்து சிந்தித்துப் படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்