மலைகளில் கோவில் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றி குறிப்பிடும் நுால். தல புராணம் சிறப்பு, கோவில் திறந்திருக்கும் நேரம், செல்ல வேண்டிய வழிமுறை, வழிபடுவோர் பெறும் பலன் பற்றி தெளிவுடன் தெரிவிக்கிறது.
ஸ்ரீபெருராம ஆஞ்சநேயர் திருக்கோவில் துவங்கி, 20 தலைப்புகளுடன் நிறைவெய்துகிறது. பெரும்பகுதி முருகன் கோவிலைப் பற்றியது. மாதம் ஒரு மலைக் கோவிலுக்குச் சென்று வந்தால் புத்துணர்ச்சி பெறலாம் என்று அனுபவ பூர்வமாக விளக்கியுள்ள நுால்.
வெற்றி மலை முருகனை வழிபட்டு சுபிட்ஷமாக வாழலாம் என பதிவிட்டுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்