சொத்து ஆவண பதிவு சட்டம், அதிகாரங்கள், வழிமுறைகளை வெளிப்படுத்தும் நுால். பத்திரப் பதிவு செய்தல் பற்றிய சட்டம், 1908 என்னும் தலைப்பில் தொடங்கி, 51 தலைப்புகளைக் கொண்டுள்ளது.
முத்திரை தாள்கள் அடங்கிய ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்புறம் சொத்து வாங்குபவர் மற்றும் சொத்து விற்பவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் புகைப்படம், அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சரி பார்த்த பின், சார் – பதிவாளர் பத்திரத்திற்கான பதிவு எண்ணைக் குறிப்பிடுவார்.
விற்பவர் மற்றும் வாங்குபவர் புகைப்படங்கள் முதலாவது முத்திரைத்தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு, கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும். புகைப்படங்களின் மேல் சார் – பதிவாளர் கையொப்பம் இடுவதோடு, ஆவணத்திற்கான சாட்சிகள் இருவரது கையொப்பமும் பெறப்பட்டு, பதிவு நிறைவு பெறும் என்பது போன்ற தரவுகளை கொண்டுள்ளது.
பத்திரப்பதிவு, சொத்து சார் ஐயங்கள், சொத்தைப் பாதுகாத்தல், பத்திரப்பதிவுச் சட்டங்கள், தமிழகப் பத்திரப்பதிவு அலுவலகங்கள், மாதிரி விண்ணப்ப படிவங்கள் என அற்புதமான நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்