வைணவ இலக்கியத்தில் தனிப்பெரும் சிறப்புடன் திகழும் பெண் ஆழ்வாரின் சிறப்பு குறித்து கூறும் நூல்.
மனித உருவில் பிறந்த திருமாலை மனதார நினைத்து, பாவை நோன்பு எடுத்த புராணச் செய்தியை, திருப்பாவை 30 பாசுரங்களும் கூறும். ஆண்டாள் பாடிய இந்த 30 பாடல்களும், ‘சங்கத் தமிழ் மாலை’ என்று போற்றப்படுகிறது. ஆண்டாள் பாடிய மற்றொரு நூல், நாச்சியார் திருமொழி.
‘திரு’ என்றால் மரியாதைக்குரிய என்று பொருள். பாவை என்றால் பெண். மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய ஆண்டாள் பாடிய பாமாலையே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்.
இவர் அருளிய திருப்பாவையின் 30 பாசுரங்களும் விளக்கமாக எளிய உரையுடனும், போதுமான ஓவியங்களின் துணையுடனும், பொழிப்புரை, பதவுரை என உருவாக்கப்பட்டுள்ள நூல்.
– முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்