முனைவர் பட்டத்திற்காக ஆய்வில் ஈடுபட்டவர், தன் அனுபவங்களை, எட்டு தலைப்புகளில் விவரிக்கும் நுால். சென்னை விடுதியில், இரவில் மட்டும் துாங்க கிடைத்த அனுமதி; பகல் முழுதும் நுாலக தேடல்; எழுத்து பயிற்சிக்கு உதவிய ரயில் நிலைய இருக்கைகள் என, பொருளாதார சூழலைக் காட்டி விளக்குகிறார்.
நட்பு, வழிகாட்டுதல், உதவி என, நெறியாளரின் அணுகுமுறையை, ஆசான்களாக பாவித்துள்ளார். அவர்களுடன் ஏற்பட்ட கசப்புணர்வு குறித்தும் பேசாமல் இல்லை. இதற்கு அடிப்படை காரணம், பல்கலைக்கழக நிர்வாக முறை, அதனால் ஏற்பட்ட பணிச்சுமை தானே தவிர, பண்போ, குணமோ காரணமில்லை என்கிறார்.
ஒரு துறை சார்ந்த ஆய்வுக்கு செல்லும் முன், எப்படி தயார் செய்வது, அதற்கான தேடல், பயணம் திட்டமிடல், நெறியாளரை அணுகும் முறை, சவால்களை எப்படி எதிர்கொள்ளுதல், ஆய்வை எப்படி வெளிக்கொண்டு வருவது போன்ற நுட்பங்களை பேசியுள்ளார். ஆய்வு பணி மேற்கொள்ள துடிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்