வேத வியாசர் வேதங்களைத் தொகுத்து, இதிகாசங்களை எழுதி முடித்து, 18 புராணங்களையும் செய்து முடித்தும், மன நிறைவு இன்றி இருந்தார். பிறகு, நாரதர் சொல்ல ஸ்ரீமத் பாகவதம் எழுதிய பிறகு தான், திருப்தி அடைந்தார். இதைப் படிப்பவர், கேட்பவர் பாவங்கள் போகும், பலவித நன்மைகள் வந்து சேரும்.
பாரதப் போர் முடிந்ததும், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மர், கண்ணனை வணங்கி, உத்தராயண காலத்தில் உயிர்விட்டார். கலியுகத்தில், கலிபுருஷன் இருக்கும் இடங்களாக, பரீட்சித்து மன்னர், மது, சூது, மாதர் மோகம், ஜீவஹிம்சை, பொன்னாசை ஆகியவற்றைக் கூறியுள்ளார். இன்றும் குற்றங்களின் பிறப்பிடங்களாக இவை உள்ளன.
ஏழு நாளில் சாகப் போகும் பரீட்சித்து மன்னர், சுகர் முனிவரிடம் பாகவதம் கேட்டார். துவார பாலகர்கள் ஜெய, விஜயன் சாபத்தால், இரண்யாட்சன், இரண்யகசிபு எனும் அரக்கர்களாய் மாறி, கடலுக்குள் பூமியை மறைத்தான். வராக அவதாரம் எடுத்து, பெருமாள் பூமியைக் காத்தார்.
சிறுவன் துருவன் தவம், பரதன் பாசமற்ற நிலை, நரசிம்ம அவதாரம், பாற்கடலைக் கடையும் போது, மந்திரமலை விழாமல் தாங்க ஆமை வடிவில் எடுத்த கூர்ம அவதாரம், ராமரும் பரசுராமரும், கண்ணன் லீலைகள் மற்றும் அவர் வைகுண்டம் செல்வது வரை கதையாக சொல்லப்பட்டுள்ளது. பாகவதம், பெருமாள் பெருமை பேசும் அருமை நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்