பெண்மையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெண்கள் இந்த சமூகத்தின் முதன்மையானவர்கள் என்பதை, அனைவரும் அறிய வேண்டுமென்ற நோக்கில் படைக்கப்பட்டுள்ள நுால்.
ஆறு தலைப்புகளில் பெண்களின் தனித்துவம், முக்கியத்துவம் ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. இறுதியாக அமைந்துள்ள ஏழாவது தலைப்பில், இணைப்பு என்ற பெயரில், திரு.வி.க.,வின் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை நுாலின் கருத்துச் சுருக்கத்தை இணைத்துள்ளார்.
பெண்களின் திருமண வாழ்க்கை, குடும்பத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு, குழந்தைகளைப் பேணுதல், திருமணம் முடிந்தும் பெற்றோரை பாதுகாத்தல் போன்ற கருத்துகள், இன்றைய சூழல்படி கூறப்பட்டுள்ளன.
வரதட்சணை பற்றிக் கூறியுள்ள கருத்துகள் சிந்திக்க வைக்கின்றன. வரதட்சணை என்பது ஊழல் என குறிப்பிடுகிறார். திருமணத்தில் துவங்கும் வரதட்சணை என்ற ஊழல், வாழ்நாள் இறுதி வரை தொடர்வதாகவும், மனிதர்களின் ரத்தத்தோடு அது கலந்துவிட்டதாகவும் சாட்டையடி கொடுக்கிறார். பெண்மையைப் போற்றினால், சமுதாயம் சிறக்கும் என்பதை நிரூபிக்கும் வகையிலான நுால்.
– முகில் குமரன்