சிலப்பதிகாரத்தின் கதையை உரைநடை வடிவில் வடிக்கப்பட்டுள்ள நுால். கோவலன், மாதவி இடையே உறவு முறியக் காரணமாக அமைந்த கானல் வரிப் பாடல்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
கோவலன், கண்ணகி, மாதவி, தேவந்தி, மாங்காட்டு மறையவன், கவுந்தியடிகள், மாதரி, பாண்டிய மன்னன், கோப்பெருந்தேவி என, கதை மாந்தர்களின் பண்பு நலன்கள் சுவை குன்றாமல் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணின் துணிவு, ஆற்றல், ஆளுமை மற்றும் உயர்ந்த குணம், திறமை ஆகிய பண்பிற்கு அடையாளமாக வாழ்ந்த கண்ணகி, நீதிக்காக மதுரையை எரித்து தெய்வமானாள். பொன்னியின் தெய்வமாக போற்றப்படும் கண்ணகி வழிபாடு, தமிழகம், கேரளா மட்டுமின்றி, இலங்கையின் பல பகுதிகளிலும் நிகழ்வதைக் கள ஆய்வு மேற்கொண்டு, நிரல்படுத்தப்பட்டுள்ளது. கண்ணகி வழிபாடு குறித்த செய்திகளை அறிந்துகொள்ள உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்