மனதை செம்மைப்படுத்துவது ஒன்றே மகிழ்ச்சியாய் இருக்க ஒரே வழி எனத் துவங்கும் நுால். தீமைகளை வேரறுத்து நல்ல எண்ணங்களோடு உறவு கொள்வது மனதை செம்மையாக்கும் வழி என தீர்வு சொல்கிறார். மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கும் மன உளைச்சல், மன அழுத்தம், மறதி போன்றவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் விளக்கியுள்ளார்.
மன மகிழ்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் சீரிய வழிகளைப் பட்டியலிட்டுள்ளார். தன்னம்பிக்கையே தாரக மந்திரம் என்றும், வாழ்க்கைத் துணையே மனித வாழ்வின் மூலதனம் எனவும் கூறுகிறார். இந்த இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்வது குடும்ப வாழ்வே எனப் பதிவு செய்துள்ளார். வள்ளுவம் வலியுறுத்தும் இல்லற மாண்பை பல மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார். நினைவாற்றலை வளர்க்கச் செய்ய வேண்டுவனவற்றை நிரல்படுத்தியுள்ளார்.
புதுமண தம்பதியர் மட்டுமின்றி அனைவரும் மன மகிழ்ச்சியை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்