புராணக் கதைகளில் உள்ள நிகழ்ச்சிகளுடன் குழந்தைகளுக்கு நன்னெறி சொல்லும் விதமாக எழுதப்பட்டுள்ளது. இளமை, உடம்பு, செல்வம் இவை மூன்றும் நிலையில்லாதது என்பதை துறவிகள் மட்டுமல்ல அனைவரும் உணர வேண்டும். மணிமேகலை காப்பியம் சொல்லும்
உண்மையை எளிமையான நடையில் சொல்லியிருக்கிறார். தாய் சொல்லைத் தட்டாத மணிகண்டன், புலிப்பால் கொண்டு வந்த அய்யப்பன் கதையின் மூலம் துரோக எண்ணம் கொண்டவர்களையும் திருத்தும் உன்னதம் புறப்படுகிறது.
அகலிகை கல்லான கதை மூலம் யாரையும் தவறான கண்ணோட்டத்தில் தண்டிக்கக் கூடாது என்று தெரிய வைக்கிறார்; குழந்தைகளுக்கு உகந்த புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்