தமிழகத்தில் மிக முக்கியமான வைணவ திருக்கோவில்களில் ஒன்றான அழகர் கோவில் பற்றி ஆராய்ந்து, வரலாற்றுப்பூர்வமாக விரிவான தகவல்களுடன் வெளிவந்துள்ள நுால். கோவிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் உள்ள குறிப்புகள், அழகர் கோவிலின் சமூகத் தொடர்பு என பல விபரங்களை ஆராய்ந்து, துல்லியமான தகவல்களை பதிவு செய்துள்ளது. அந்த வட்டார மக்களுக்கு கோவிலுடன் உள்ள தொடர்பு பற்றியும் விரிவாக ஆராய்கிறது. இதில், கள்ளர் இன மக்கள், இடையர் இன மக்கள், பள்ளர் மற்றும் பறையர் இன மக்கள், வலையர் இன மக்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் நடக்கும் பழமரபு திருவிழா, அது பற்றிய பழங்கதைகள், கோவிலை வர்ணிக்கும் பாடல்கள், நாட்டுப்புற கலைகள், கோவில் பணியாளர் பற்றி எல்லாம் முழுவதுமாக ஆராயப்பட்டுள்ளது. அழகர் கோவிலின் தொன்மை, சிறப்பு, சமூக பங்களிப்பு என பல கோணங்களில் துல்லியமான தகவல்களை தரும் அபூர்வ ஆராய்ச்சி நுால்.
– மலர்