சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கையை வரிசைப்படுத்தி தந்துள்ள மொழிபெயர்ப்பு நுால். பள்ளிப் பருவத்திலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். அந்தமான் சிறை அனுபவங்களை எடுத்துரைத்த பின் அவரது கடிதங்களையும் தருகிறார்.
செல்லுலர் சிறையிலிருந்து சாவர்க்கர் எழுதிய ஒன்பது கடிதங்களைப் படித்து முடித்தால், அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி கட்டவிழ்த்த அடக்கு முறையையும், இந்தியர் அனுபவித்த கொடுமைகளையும் உணர்ந்துகொள்ள முடியும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை மத விடுதலைப் போராட்டமாகவும் எடுத்துச் சென்ற உண்மையை தெரிவிக்கிறது. சாவர்க்கரின் ஜாதி பற்றிய சிந்தனையை நான்காவது கடிதம் நேரடியாகத் தெரிவிக்கிறது.
ஆயிரம் ஜாதி என்றாலும், நான்கு ஜாதி என்றாலும், ஜாதி என்பது தேவையற்ற ஒன்று என்பதையும், ஜாதி முறை தகர்க்கப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்துள்ளார். பத்தொன்பதாம் நுாற்றாண்டின் அரசியல், சமூக நிலையை புரிந்துகொள்ள உதவும் கடித இலக்கிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்