ஜைன ஆசாரியர்களின் அமுத மொழிகளை தொகுத்து, அனைவரும் விரும்பும் வகையில் அளித்துள்ள நுால். கருத்துகளை தொகுத்துள்ளதால், பல நுால்களை தனித்தனியாக தேட வேண்டிய சிரமத்தை போக்கியுள்ளார்.
சமண சமய பழம்பெரும் இலக்கியங்கள், நீதி நுால்கள், துதி நுால்களில் இருந்து எடுக்கப்ப்டட சிறந்த மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி மற்றும் பதிணென் கீழ்க்கணக்கு நுால்களான திருக்குறள், ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம், பழமொழி, இனியவை நாற்பது போன்றவற்றிலும் இருந்தும், அமுத மொழிகள் உள்ளன.
இலக்கண நுாலான நன்னுாலில் இருந்தும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருநுாற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்ற நுால்களில் உள்ள பொன்மொழிகளும் தொகுக்கப்பட்டுள்ளன. சிரமமின்றி அரிய கருத்துகளை படிக்க உதவும் வகையில் அமைந்துள்ள புத்தகம்.
– முகில் குமரன்