பண்டைய இலக்கிய பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த கட்டுரைகளை கொண்டுள்ள நுால். முதல் பகுதியில் தமிழர் பண்பாடு, தமிழ் மொழி சிறப்பைக் கூறும் கட்டுரைகளும், இலக்கியங்களில் காணப்படும் அறக்கருத்து அறிவுரைக் கட்டுரைகளும் உள்ளன.
இரண்டாம் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பியல்புகளையும் தொன்றுதொட்டு வரும் தமிழர் பழக்க வழக்கங்கள், கோட்பாடுகள், அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியல் கூறுகள், நம்பிக்கைகள், நாகரிக மாற்றங்கள் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளது.
திருக்குறள் முப்பாலில் உள்ள தேர்ந்தெடுத்த 75 குறள்களுக்கு விளக்கமும், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேட்கை போன்றவற்றிலிருந்து தேர்ந்த வாசகங்களும் கம்பராமாயண வினாடி – வினா மற்றும் கம்ப காவிய மணிமொழிகளும் தனித்தனித் தலைப்புகளில் தரப்பட்டுள்ளன.
பிற்சேர்க்கையாக, திருமுறைகளை அருளிய 27 புலவர்களின் காலக் குறிப்பு மற்றும் பாடல் எண்ணிக்கை இணைக்கப்பட்டுள்ளது. பல்வகை தலைப்புகளில் எளிய நடையில் அமைந்துள்ள நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு