திருமங்கை ஆழ்வார் எழுதியுள்ள பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் நுால்களில் உள்ள செய்திகளை, ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள நுால். சில பாடல்களுக்கு வார்ப்புரையும் தருகிறது.
திருமங்கை ஆழ்வாரின் கவிதைத்திறனை ஆராய்கிறது. தமிழிலக்கிய மரபும் இறையுணர்வும் என்ற முதல் இயல், ஆழ்ந்த கவனத்துடன் எழுதப்பட்டுள்ளது. படைப்புகளில் முற்றிலும் புதிய வகையில், பக்தியோகம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அவை, அழகியல் சார்ந்த பரவசத்தை தருகிறது; தத்துவார்த்த செழுமை கொண்டவை என்ற கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய திருமொழியின் முதல், 10 பாடல்களை விவரிக்கும் முறையில், ‘சிக்கென’ என்ற பதத்திற்கு காணும் பொருள் நுட்பம் மிகவும் இனிமையாக உள்ளது. இது போன்று பல பதங்களுக்கு நுட்பத்தை தந்துள்ளார்.
‘ஊனிடைச் சுவர் வைத்து’ என்ற பாசுரத்திற்கும், ‘ஓது வாய்மையும் உவனியப்பிறப்பும்’ என்ற பாசுரத்திற்கும், எழுதியுள்ள வார்ப்புரை அருமையாக உள்ளது.
– ராம.குருநாதன்