மகாகவி பாரதி இயற்றிய விநாயகர் நான்மணி மாலை பாடல்களை, விளக்கவுரையுடன் தரும் நுால். மணக்குள விநாயகர்கோவில் தோற்றம், வரலாற்றுத் தகவல்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதி பாடிய சிற்றிலக்கியத்தில், தனித்து விளங்கும் படைப்பு இது. விநாயகர் வழிப்பாட்டின் வழி இறைவனை நோக்கும் ஆன்மிக பக்குவத்தை தருகிறது. வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் பாவகைகளில் புனையப்பட்டுள்ளது.
இன்சுவைப் பாடல்கள், அந்தாதிகளாகத் தொடுக்கப்பட்டுள்ள விதம் செறிந்த புலமைக்கு சிறப்பு சேர்க்கிறது. கரைபுரளும் கவிதை வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடும் பாரதியின் வரிகள் இறுதி வரை இலக்கண மரபு பிறழாமல் நிற்கிறது. பல அரிய தகவல்களை தருகிறது.
நாட்டு விடுதலையில் அடங்கா வேட்கையும், தமிழ்மொழி மீது தீராப்பற்றும் கொண்ட பாரதி சிறந்த இறையுணர்வாளராக, வழிபாட்டுப் பாமாலையாக இதை தொடுத்துள்ளார். ஆழ்ந்து படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு