கே.எஸ்.சுந்தரம் என்ற எழுத்தாளர் ஆதவனைப் பற்றியும், தமிழ் எழுத்துலகத்திற்கு அளித்துள்ள பங்களிப்பு குறித்தும் எழுதப்பட்டுள்ள நுால். 45 வயது வரை வாழ்ந்த ஆதவன், எழுத்துலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்.
இளமைப் பருவத்தில் டில்லியில் இருந்த இவர், அந்த நகரின் அப்போதைய நிலையை அப்படியே படம் பிடித்து, படைப்புகளில் கொண்டு வந்துள்ளது பற்றி விபரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாராளமயமாக்கல், அன்னிய முதலீடு, உள்நாட்டு அரசியல், கணினிமயமாக்கல் போன்றவற்றின் ஆரம்ப காலக்கட்டத்தையும் தெளிவாக ஆதவன் எழுத்து களில் காண முடியும் என, பெருமை சேர்க்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
கவனிக்கப்படாமல் இருந்த எழுத்தாளுமை பற்றி அறிய உதவும் நுால்.
– முகில் குமரன்