தமிழகம், கேரளத்தில் பிரசித்தமாக உள்ள கோவலன் –கண்ணகி கதைப்பாடல்களை, இனவரைவியல் கோட்பாடுகளை கொண்டு ஆய்ந்துரைக்கும் நுால்.
உலகில் பல காப்பியங்கள் வாய்மொழி மரபை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்ததைச் சுட்டிகாட்டுகிறது. பண்டைய தமிழர்களின் இசை, ஆடல், பாடல், கூத்து வகைகளைச் சிலப்பதிகாரம் நுட்பமாக எடுத்துரைப்பதை கூர்மையாக ஆராய்ந்து விவரிக்கிறது.
சேர, சோழ, பாண்டிய நாட்டில், வணிகர், பழங்குடிகள் என பலவகை மாந்தர் வாழ்வியல் முறைமைகள், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள், கலைப் பண்பாடுகளை தெளிவாக ஆராய்கிறது. அதை இனவரைவியல் பரிமாணத்தில் விளக்குகிறது.
வேட்டையாடுவோரின் ஆடல், பாடல், கூத்து, இசை, சாமியாட்டத்தில் தெய்வமேறிய நிலையில் பெண்கள் குறி சொன்னது, கொற்றவை வழிபாட்டு நடைமுறை, வள்ளிக்கூத்து, வென்றிக்கூத்து, மரக்கால் கூத்து பற்றியும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு