பள்ளிகளில் பகவத் கீதை படிக்கச் சொல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ‘அப்படி எதிர்ப்பு தெரிவிப்பதும் நானே...’ என்கிறார் கிருஷ்ணர். ‘பைத்தியக்காரன்... மனிதனாகப் பிறந்து, தன்னைத் தானே கடவுளாகச் சொல்லிக் கொள்பவன்...’ என, ராமரையும், கிருஷ்ணரையும் வசைபாடுகின்றனர்.
அர்ஜுணனும் அப்படி தான் வசைபாடினான். அவனுக்குப் புரியும் வகையில், அவன் யார் என்பதை உணர்த்தும் வகையில், ‘நானே செயல்புரிபவன்’ என்ற மிதப்பில் இருந்தவனின் மூளையைத் தட்டி எழுப்பி, கடமையை நிறைவேற்றச் செய்தார் கிருஷ்ணர்.
என்ன சொன்னார் என்பது தான் கீதை! வேற்று மதத்தினர் இதைப் புரிந்து கொள்வது கடினமே! ஆனால், ஹிந்துவாகப் பிறந்து கீதையைப் படிக்காமல் போனால், மனிதனாகப் பிறந்ததன் அர்த்தமே புரியாமல் மடிவோம் என்பது உறுதி.
‘வளவளவென படிக்க போரடிக்கிறது’ என நினைப்பவர்கள், ‘கீதா ஸாரம்’ படிக்கலாம்; நிதானமாக, தீர்க்கமாகப் படிக்க நினைப்பவர்கள், பேராசிரியர் மணி எழுதிய, ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ புத்தகத்தைப் படிக்கலாம்!
– பா.பானுமதி